வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் குடும்பத்தினர் ஊருக்கே கறி விருந்து போட வேண்டும்! விநோத தண்டனை

 

வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் குடும்பத்தினர் ஊருக்கே கறி விருந்து போட வேண்டும்! விநோத தண்டனை

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் ஊருக்கே கறி விருந்து போட்டால் தான் ஊருக்குள் அனுமதித்துக்கொள்ள முடியும் என மத்தியபிரதேசத்தில் உள்ள பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் ஊருக்கே கறி விருந்து போட்டால் தான் ஊருக்குள் அனுமதித்துக்கொள்ள முடியும் என மத்தியபிரதேசத்தில் உள்ள பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மத்தியப்பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், சிறுமியின் குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டது. ஒண்ட இடமில்லாமல் தவித்துவரும் சிறுமியின் குடும்பம் பஞ்சாயத்தை கூட்டி நீதி கேட்டது. அதற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதுக்காக ஊரில் உள்ள அனைவருக்கு கறிவிருந்து வைக்க வேண்டும், அப்போதுதான் ஊர் புனிதமடையும். அதன்பிறகு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஊருக்குள் தாரளமாக வரலாம் என பஞ்சாயத்து தலைவர் சிறுமியின் தந்தையிடம் கூறியுள்ளனர். 

வன்கொடுமைக்கு ஆளாகி மனமுடைந்துள்ள சிறுமியின் குடும்பத்தினரிடம்  கறி சோறு கேட்டு கொண்டாடத்தில் ஈடுபடும் பஞ்சாயத்துக்களும் இன்னும் இருக்கதான் செய்கின்றன.