வனப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் : அச்சத்தில் பொது மக்கள் !

 

வனப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் : அச்சத்தில் பொது மக்கள் !

கடந்த சில நாட்களாக உணவு பற்றாக்குறையால் காட்டு யானைகள் வனப்பகுதியில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகின்றன.

கடந்த சில நாட்களாக உணவு பற்றாக்குறையால் காட்டு யானைகள் வனப்பகுதியில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வந்த அரசி ராஜா என்னும் யானை, 2 பேரை அடித்து கொலை செய்தது. அதனை, வனத்துறையினர் மயக்க ஊசி போட்டுப் பிடித்தனர். இது போன்று காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. 

elephant

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை என்னும் வனப்பகுதியில் 15 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன. இந்த யானைகள், அங்கிருந்து ஓசூர் அருகே உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவ்வாறு, அந்த யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தால் அப்பகுதியில் உள்ள ராமா புரம், பாத்தக்கோட்டா உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, நெல் அறுவடைக்குத் தயாராக உள்ளதால் அதனையும் அந்த யானைகள் சேதப்படுத்தி விடும். 

elephant

அந்த காட்டு யானைகளை கட்டுப்படுத்த 60 வனத்துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டுக் கண்காணித்து வருகின்றனர். யானைகள் பயிர்களைச் சேதப்படுத்தாத வகையில் பாதுகாக்கும் படி வனத்துறையினருக்கு அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.