‘வந்தே மாதரம்” சொல் இல்லையென்றால் நாட்டை விட்டு செல் -மத்திய அமைச்சர் சாரங்கி 

‘வந்தே மாதரம்” சொல் இல்லையென்றால் நாட்டை விட்டு செல் -மத்திய அமைச்சர் சாரங்கி 

புவனேஸ்வர்: வந்தே மாதரத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவருக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என்று மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை, பிரதாப் சந்திரா குஜராத்தில் உள்ள  சூரத்தை வந்தடைந்தார், அங்கு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக காங்கிரஸைத் தாக்கினார், காங்கிரஸ் மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று கூறினார். 

pratap-sarangi

இந்தியாவின் சுதந்திரம், ஒற்றுமை, வந்தே மாதரம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு, இந்த தேசத்தில் வாழ  உரிமை இல்லை என்று அவர் கூறியுள்ளார். சி.ஏ.ஏ.வைக் கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று  கூறியா அவர், குடியுரிமைச் சட்டத்தின் காரணமாக, இப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் மத துன்புறுத்தலுக்கு ஆளான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், புத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்தியாவின் குடியுரிமை பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார். குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம், காங்கிரஸ்  செய்த பாவங்களை மோடி அரசு சரிசெய்துள்ளது என்றார்.

காங்கிரஸ் செய்த பிரிவினை பாவம் மோடி அரசாங்கத்தால் சரிசெய்யப்பட்டுள்ளது  என்று சாரங்கி கூறியுள்ளார். சி.ஏ.ஏ 70 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். உண்மையில், இந்த செயல் நம் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கான ஒரு வழியாகும். காங்கிரஸ் பாவம் செய்தது, இப்போது நாங்கள் அதற்கு  பரிகாரம் செய்கிறோம்.