வந்துவிட்டது 5ஜி ஸ்மார்ட் போன் ! ஜனவரி 7 முதல் உங்கள் கையில் !

 

வந்துவிட்டது 5ஜி ஸ்மார்ட் போன் ! ஜனவரி 7 முதல் உங்கள் கையில் !

செல்போன் பயன்பட்டாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் போன் இந்தியாவில் ஒரு சில நாட்களில் அறிமுகம் ஆக உள்ளது. இதற்கான வேலையை ரியல் மி நிறுவனம் தொடங்கி உள்ளது.

5g

இந்தியாவில் சாதாரண பட்டன் செல்போனை பார்த்து வாயடைத்து போன மக்களிடையே அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பம் அபார வளர்ச்சி காரணமாக 2ஜி, 3ஜி, 4ஜி என வளர்ச்சி அடைந்துள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தால் வேகமாக பயன்படும் இணையதளத்தை பார்த்து பலர் பிரமிப்பாகி உள்ளனர். இந்தியா முழுவதும் மலிவான கட்டணத்தில் 5ஜி சேவை கிடைக்கும் வகையில், 2020 ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை வழங்க ரூ. 6 லட்சம் கோடி அளவு ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மார்ச் மாதத்திற்குள் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

5g

இந்திய அரசாங்கம் 5ஜி அலைக்கற்றைகளை 4.92 பில்லியன் டாலர் ரூபாய் அதிகபட்ச அடிப்படை விலையில் ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் தற்போதுள்ள அதிவேக இணைய தொழில்நுட்பமான 5ஜிக்கு போட்டியாக, ஜியோ தனது நிலையான பிராட்பேண்ட் சேவையை அதிக வேகத்தில் வழங்கவுள்ளது. வேகமான இணைய தொழில்நுட்பம் 5ஜி-ன் வேகமானது நொடிக்கு 300 மெகாபிட் என்ற அதிகபட்ச அளவில் உள்ளது.

real

இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே ரியல்மி நிறுவனம் 5ஜி வசதி கொண்ட செல்போனை ஜனவரி 7ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. புதிய செல்போனின் மாடல் பெயர் Realme X50 5G. இந்த ஸ்மார்ட் போனில், இரட்டை செல்பி கேமரா இருக்கும். முதற்கட்டமாக இந்த செல்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கும். 

real

இந்த செல்போனின் விலை இந்திய மதிப்பில் சுமார் 28,000 ரூபாய். இந்த செல்போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஸ்னாப்டிராகன் 765 ஜி மற்றும் VOOC 4.0 வேகமான சார்ஜிங் செய்யும். மேலும் இந்த செல்போனின் சிறப்பம்சங்கள் என்னவென்று பாருங்கள். NETWORK 5G, 4G, 3G, 2G, GSM, CDMA, Speed HSPA 42.2/5.76 Mbps, LTE-A, 5G (2+ Gbps DL), BODY Dimensions 8.7 mm thickness, SIM Dual SIM (Nano-SIM, dual stand-by), Size 6.67 inches, Resolution 1080 x 2400 pixels, 20:9 ratio, Protection Corning Gorilla Glass 5, PLATFORM OS Android 10.0; Chipset Qualcomm SDM765 Snapdragon 765G (7 nm), CPU Octa-core, Internal 256GB 8GB RAM, MAIN CAMERA 64 MP, SELFIE CAMERA Dual 32 MP, Front Camera 8 MP, BATTERY Non-removable Li-Po 4500 mAh battery, Charging Fast battery charging 30W: 70% in 30 min (VOOC Flash Charge 4.0)