வந்தா ராஜாவா தான் வருவேன்: மாஸ் காட்டும் சிம்பு

 

வந்தா ராஜாவா தான் வருவேன்: மாஸ் காட்டும் சிம்பு

நடிகர்  சிம்பு நடிப்பில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர்  சிம்பு நடிப்பில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கில் நடிகர்  பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர் ஹிட்டான அத்திரண்டிகி தாரேதி படத்தின் தமிழ் ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் இந்தப் படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களுடன் கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மகத், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

இந்நிலையில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக், தலைப்பு வெளியாகியுள்ளது. இதை இப்படத்தின்  தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ‘வந்தா ராஜாவா தான் வரு
வேன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் பொங்கலன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.