வந்தா ராஜாவா தான் வருவேன்…ஹெச்.ராஜா தான் டாப்; பட் அட்மின் நாட் ஹேப்பி?

 

வந்தா ராஜாவா தான் வருவேன்…ஹெச்.ராஜா தான் டாப்; பட் அட்மின் நாட் ஹேப்பி?

ஹெச்.ராஜா பற்றி சொல்லவே தேவை இல்லை. சமூக வலைத்தளம் தொடங்கி, பட்டி தொட்டியெங்கும் இவர் மீது வெறுப்பு அதிகம். இவர் மீது மட்டுமல்ல இவருடைய அட்மின் மீதும்

சென்னை: தமிழக பாஜக வேட்பாளர்களில் அதிகம் வெறுக்கப்படும் வேட்பாளர்களில் சர்ச்சைகளின் நாயகன் ஹெச்.ராஜா முதலிடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மக்களவை தேர்தலில் மோடி அலை வீசிய போது, தமிழகம் மட்டும் எவ்வித சலனமும் இன்றி இருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமாரான பின்னர், தமிழகத்தில் வாய்ஸ் இன்றி இருந்த பாஜக மெல்ல தனது குரலை மேலெழுப்பியது. அடுத்தடுத்த சர்ச்சை கருத்துகள் மூலம் மீடியா லைட்டை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சிகளில் பாஜக-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இறங்க, அக்கட்சியினரும் அவருக்கு முட்டுக் கொடுத்து ஊடக வெளிச்சத்தை தங்கள் பக்கம் ஈர்த்தனர்.

ttv dhinakaran

இதையடுத்து, நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்ற அவருக்கு அடுத்ததாக அதிமுக-வின் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த இடைத்தேர்தலில் திமுக 24,651 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தது.

tamilisai

அதேபோல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கரு நாகராஜன் 1,417 வாக்குகள் பெற்றார். ஆனால், நோட்டாவுக்கு 2,373 வாக்குகள் கிடைத்தது. இந்த தேர்தல் தமிழகத்தில் பாஜக-வின் நிலை குறித்து அக்கட்சிக்கு பாடம் புகட்டியதையடுத்து, தமிழகத்தில் பாஜகவின் நேரடி எதிரியாக நோட்டாவே மாறிப்போனது. இந்த மன உளைச்சலில் தனியாக வெதும்பிக் கொண்டிருந்தாலும் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக-வினர் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

bjp candidates

இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. நோட்டாவை வெல்ல முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கும் பாஜக, இந்த முறை அப்படி எதுவும் நடக்காமல் இருக்கும் பொருட்டு, அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

bjp aiadmk

மேலும், இந்த கூட்டணியில் ஐந்து தொகுதிகளை கேட்டு பெற்றுள்ள அக்கட்சி, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

hraja

இதில், பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். எனினும், வெற்றி பெற்று அமைச்சரான பின்னர், ஒரு விதமான இறுகிய முகத்துடனேயே வலம் வருகிறார். ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்ட இவரது பல்வேறு கருத்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின.  அதேபோல், தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை முன்னிலையில் பாசிச பாஜக என முழக்கமிட்ட சோபியா என்ற பெண் மீது போடப்பட்ட வழக்கு, அவரது வீட்டுக்கு சென்று பாஜக-வினர் மிரட்டியது உள்ளிட்டவைகளால் தமிழிசை மீது அதிருப்தி ஏற்பட்டது.

raja

சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஒருவிதமான முதலாளி தோரணை இருக்கும். ஆண்டாள் விவகாரத்தின் போது நயினார் நாகேந்திரன், இந்துக்களை இழிவுபடுத்துபவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற அளவுக்கு பேசினார். இரட்டை இலைக்குள் இருந்து பறந்து வந்து இவரை தாமரை தனக்குள் வாரி அனைத்துக் கொண்டது. ஹெச்.ராஜா பற்றி சொல்லவே தேவை இல்லை. சமூக வலைத்தளம் தொடங்கி, பட்டி தொட்டியெங்கும் இவர் மீது வெறுப்பு அதிகம். இவர் மீது மட்டுமல்ல இவருடைய அட்மின் மீதும்.

இந்த நிலையில், இணையதளம் ஒன்று தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் பாஜக வேட்பாளர்கள் யார் என்ற கேள்வியை முன் வைத்து, இந்த வேட்பாளர்கள் பெயர்களை பட்டியலிட்டுள்ளது. பாஜக என்றாலே வெறுப்பு தான் அதிலும் அதிகமாக வெறுக்கப்படும் வேட்பாளர்கள் யார் என கேட்டு கேளியிலேயே உள்குத்து ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

raja poll

இதுஒருபுறம் இருந்தாலும், இந்த கேள்வியை பார்த்ததும் ஆர்வமாக வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றிய சமூக வலைதளவாசிகள், தங்களது ஏகோபித்த ஆதரவை ஹெச்.ராஜாவுக்கு வாரி வழங்கி, அதிகம் வெறுக்கப்படும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் டாப் லிஸ்டில் அவரை வைத்து அழகு பார்த்து வருகின்றனர்.

சிவகங்கை சீமையில் களமிறங்கும் ஹெச்.ராஜா, தேர்தலில் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், வெறுப்பு லிஸ்டில் எப்போதும் முதலிடம் பெறுவதில் அவருக்கு வெற்றி நிச்சயம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிங்க

இயக்குனர் மகேந்திரனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை; விரைவில் நலம்பெறுவார் யதார்த்த கலைஞன்?