வந்தாச்சு ஜியோஃபைபர்.. 100Mbps வேகம் வெறும் 699 முதல்!! பிளான்கள் பட்டியல் இதோ..

 

வந்தாச்சு ஜியோஃபைபர்.. 100Mbps வேகம் வெறும் 699 முதல்!! பிளான்கள் பட்டியல் இதோ..

ஜியோஃபைபர் சேவை நாடு முழுவதும் முகேஷ் அம்பானி கடந்த மாதம் அறிவித்தது போல இன்று வெளியானது. ஜியோஃபைபர் சேவை  சுமார் 1600 நகரங்களில் முதற்கட்டமாக அறிமுகமாகிறது.

ஜியோஃபைபர் சேவை நாடு முழுவதும் முகேஷ் அம்பானி கடந்த மாதம் அறிவித்தது போல இன்று வெளியானது. ஜியோஃபைபர் சேவை  சுமார் 1600 நகரங்களில் முதற்கட்டமாக அறிமுகமாகிறது.  ஜியோ நிறுவனம் இன்று ஜியோஃபைபர் திட்டங்கள், ஜியோபோன் லேண்ட்லைன் சேவை, ஜியோ செட்-டாப் பாக்ஸ் போன்ற பல திட்டங்களின் தகவல்களை வெளியிட்டுள்ளது. 

jio

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோஃபைபர் பிராட்பேண்டை இன்று வெளியிட்டபின், இது முன்னோட்ட சலுகை மட்டுமே, பயனாளர்களை பொறுத்து ஜியோ சிம் சேவை போல புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முன்னோட்ட சலுகைகளுக்காக முழு விவரம் இதோ..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஜியோ பைபர் சேவையில் ஆறு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு பட்டியலிட்டுள்ளது. 

1. ப்ரான்ஸ் பேக் – மாதத்திற்கு 699 ரூபாய் – 150GB 30 நாட்களுக்கு, 

2. சில்வர் பேக் – மாதத்திற்கு 849 ரூபாய் – 200GB – 30 நாட்களுக்கு, 

3. கோல்ட் பேக் – மாதத்திற்கு 1,299 ரூபாய் – 500GB – 30 நாட்களுக்கு, 

4. டைமண்ட் பேக் – மாதத்திற்கு 2,499 ரூபாய் – 1250GB – 30 நாட்களுக்கு, 

5. பிளாட்டினம் – மாதத்திற்கு 3,999 ரூபாய் – 2500GB – 30 நாட்களுக்கு, 

6. டைட்டானியம் – மாதத்திற்கு 8,499 ரூபாய் – 5000GB – 30 நாட்களுக்கு. 

ஜியோஃபைபர் ப்ரான்ஸ் மற்றும் சில்வர் திட்டங்கள் 100Mbps டேட்டா வேகத்திலும், கோல்ட் மற்றும் டைமண்ட் திட்டங்கள் இரண்டும் 250Mbps மற்றும் 500Mbps டேட்டா வேகத்திலும் வழங்கப்படுகிறது. பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்டங்கள் இரண்டும் 1Gbps  டெட்டா வேகத்தில் வழங்கப்படுகிறது. 

ஜியோஃபைபர் 1மாதம், 3 மாதம், 6 மாதம் மற்றும் 12 மாத திட்டங்களை கொண்டிருக்கிறது. 
வாடிக்கையாளர்கள் வேண்டியவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

வருடாந்திர சேவை பெறுவோருக்கு ஜியோ நிறுவனம் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது. அதில், ஹோம் கேட்வே, 4K செட்-டாப் பாக்ஸ், டிவி (கோல்ட் பேக் அல்லது அதற்கு மேல் உள்ள பேக் பயனாளிகளுக்கு) மற்றும் ஜியோ செயலிகள் அனைத்தும் இலவசம் ஆகியன வழங்கப்பட உள்ளது.