வந்தாச்சு ஒன்ப்ளஸ் டி.வி!! எப்போ இருந்து வாங்கலாம் தெரியுமா?

 

வந்தாச்சு ஒன்ப்ளஸ் டி.வி!! எப்போ இருந்து வாங்கலாம் தெரியுமா?

ஸ்மார்ட்போன் விற்பனையில் கலக்கி வரும் ஒன்பிளஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிகாரபூர்வமாக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை தொழில்நுட்ப சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

வந்தாச்சு ஒன்ப்ளஸ் டி.வி!! எப்போ இருந்து வாங்கலாம் தெரியுமா?

ஸ்மார்ட்போன் விற்பனையில் கலக்கி வரும் ஒன்பிளஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிகாரபூர்வமாக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை தொழில்நுட்ப சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

oneplus

பி பி கே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் தயாரிப்பின் ஒரு அங்கமாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இருந்து வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்லாது; அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் இதன் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. 

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்  இந்திய ரூபாய் மதிப்பின் படி, 25 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தாலும்கூட தொழில்நுட்ப சந்தையில் தனி மவுசு சற்றும் குறையவில்லை. 30 ஆயிரத்திற்கும் அதிகமான விலை கொண்ட ஸ்மார்ட்போன் விற்பனையில் ஒன்பிளஸ் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.

 இதற்கிடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, தொழில்நுட்ப சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி-களை கொண்டு வர இருப்பதாகவும் இதற்கான தயாரிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் எப்போது வெளியாகும் என்பதை அடுத்த ஆண்டு தெரிவிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற தொழில்நுட்ப நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொழில்நுட்ப சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் டிவிகள் அறிமுகமாகும். இது இந்தியாவில் தான் முதன்முதலில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதன் பிறகு அமெரிக்கா, ஐரோப்பா ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் அறிமுகமாக இருக்கின்றன. 

கடந்த ஆண்டு நான் தெரிவித்ததை போல ஒன் பிளஸ் நிறுவனத்திற்கு இந்த டிவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறது. விரைவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தருவதற்கான ஒப்பந்தத்தை பெற்றபிறகு சந்தையில் அறிமுகமாகும் என குறிப்பிட்டார். 

மேலும் எங்களது நெவர் செட்டில் என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையில் டிவியின் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வன்பொருள் மிகவும் தரமானதாக பொருத்தி இருக்கிறோம். நிச்சயம் எங்களின் ஸ்மார்ட்போனை ஏற்றுக்கொண்டது போல டிவிகளும் பயனாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பெரும் வரவேற்ப்பை கொடுக்கும் என நம்புகிறேன் என்றார்.