“வணக்கம் சொல்லுங்க கொரோனா வைரஸிலிருந்து தப்பிச்சிக்கோங்க” நடிகர் விவேக் சொல்லும் அட்வைஸ்!

 

“வணக்கம் சொல்லுங்க கொரோனா வைரஸிலிருந்து தப்பிச்சிக்கோங்க” நடிகர் விவேக் சொல்லும் அட்வைஸ்!

கொரோனா வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். 

உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

 

இதன் காரணமாகச் சீனாவிலிருந்து வரும் பயணிகள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். 

இந்நிலையில் நடிகர் விவேக்  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார். அதில், ‘ கொரோனா  வைரஸ் இன்று உலகத்தையே அச்சுறுத்திகிட்டு இருக்க வைரஸ் தான். முதல்ல தமிழ்நாடு மாதிரி ஒரு இடத்தில் இப்படி வெயில் அடிக்கும் போது  கொரோனா வைரஸ் என்பது அழிந்துவிடும். அந்த பாதிப்பு நமக்கு இருக்காது.

ttn

இருந்தாலும் பாதுகாப்புக்காக மக்கள் செய்யவேண்டியது என்ன அப்படினா, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவனும், இருமல் வரும் போதும், தும்மல் வரும் போதும் கைக்குட்டையை பயன்படுத்தனும். எல்லாத்தையும் விட தமிழர்கள் கலாசாரத்தை பயன்படுத்தனும். அதாவது  கை குலுக்காமல் , கை குவித்து வணக்கம் சொல்லணும்’  என்று கூறியுள்ளார்.