வட தெரியும்…வாடா தெரியுமா…! ‘இறால் வாடா’ செஞ்சு பாருங்க!

 

வட தெரியும்…வாடா தெரியுமா…! ‘இறால் வாடா’ செஞ்சு பாருங்க!

தமிழகமெங்கும் கிடைக்கும் உளுந்து வடையின் இரட்டை பிறவிதான் இந்த ‘வாடா’. ஆறு வித்தியாசமெல்லாம் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஆனால், கூடுதல் மொறுமொறுப்பு, வித்தியாசமான சுவை என இது வேற லெவல்

நாகூர் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நாகூர் தர்கா சந்தனக்கூடு, நாகூர் அனீபாவின் பாட்டு போல நாகூரின் இன்னொரு சிறப்புதான் ‘வாடா’!

nagore

மஞ்சள் வாடா, தொப்பிவாடா சூலிவாடா என்று மூன்றுவகை ‘வாடா’க்கள் உண்டு. இவையல்லாமல் சீனி வாடா என்று ஒரு இனிப்பு வாடாவும் இந்த ஊரில் கிடைக்கும்.

நீங்கள் எவ்வளவு பெரிய அப்பா டக்கராக இருந்தாலும், ‘வாடா, வேணுமா என்று தான் கேட்பார்கள், கோபப்பட்டு பொருளில்லை! அப்படியே கோபம்.வந்தாலும் ஒரு வாடாவை வாங்கி ஒருவாய் சாப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் கிளீன் போல்டு!

prawn

தமிழகமெங்கும் கிடைக்கும் உளுந்து வடையின் இரட்டை பிறவிதான் இந்த ‘வாடா’. ஆறு வித்தியாசமெல்லாம் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஆனால், கூடுதல் மொறுமொறுப்பு, வித்தியாசமான சுவை என இது வேற லெவல். இதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி 2 கப் எடுத்து, கழுவி 12 மணிநேரம் ஊறவையுங்கள். 2 கப் பழைய சோறு, கொஞ்சம் தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டு.

ஊறவைத்த அரிசி, பழைய சோறு இரண்டையும் அரைத்துக்கொள்ளங்கள், அத்துடன், தேங்காய் துருவல், பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். எறாலை சுத்தம் செய்து, சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காட்டாக தனியாக வேக வைத்து எடுங்கள்.அதன் பிறகு, ஒரு கடாயில் சிறிது எண்ணை விட்டு எறாலை வறுத்துக்கொள்ளுங்கள்.

nagore vaada

இப்போது எறாலையும் மாவுடன் சேர்த்து பிசைந்து மெது வடையைப் போல எண்ணையில் இட்டு பொரித்து எடுத்தால்,’வாடா’ ரெடி! இதற்கு ஒரு தொடுகறி இருக்கிறது.அதன் பெயர் ‘உள்ளடம்’. தேங்காய் துருவல், வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய கலவைதான் உள்ளடகம்.

இதை ஒரு முறை சுவைத்துப் பாருங்கள், பாரதி,’காலா என் காலருகே வாடா’ என்று சொன்னது தவறென்று உங்களுக்கே தெரியும். என்ன செய்ய, பாரதி சைவமாச்சே!

இதையும் வாசிங்க

சாப்பிதமாத்தேன் ப்போ…’ என்று அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடும் ஆம்லெட்!