வட சென்னையின் டான்… 21 வயதில் பிரபல ரவுடியான வல்லரசு! 

 

வட சென்னையின் டான்… 21 வயதில் பிரபல ரவுடியான வல்லரசு! 

21 வயதிலேயே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் ரவுடி வல்லரசு. 

21 வயதிலேயே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் ரவுடி வல்லரசு. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் வல்லரசு. கடந்த 4 ஆண்டுகளாக சென்னை வியாசர்பாடியில் பகுதியில் வசித்துவந்த இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. 21 வயதே ஆன வல்லரசு சென்னையின் முக்கிய ரவுடியாக உருவெடுத்து வந்தவர் என, அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்ற வழக்குகள் மூலம் தெரியவருகிறது.

போதைப் பழக்கங்களுக்கு அடிமையான வல்லரசு, ரவுடி எண்ணூர் தனசேகரின் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு எம்.கே.பி நகரில் சுரேஷ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில்தான் வல்லரசுவின் பெயர் முதல் முதலாக அடிபட்டது. இதையடுத்து சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வல்லரசுவுக்கு, மற்றொரு ரவுடியான கதிர் என்பவரின் அறிமுகம் கிடைத்த பின் பிரபல ரவுடியாக உருவெடுத்துள்ளார். அதன்பின் கேங் லீடராக உருவெடுத்த வல்லரசு, கடந்த 15 நாட்களுக்கு முன் பேசின் ப்ரிட்ஜ் அருகே கொலையை நிகழ்த்தியுள்ளார்.

ஜெயங்கொண்டதிலிருந்து ஓடிவந்த வல்லரசுக்கு வட சென்னையே கோட்டையானது. அவர் மீது 3 கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல், அடிதடி என 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிழைப்பு தேடி சென்னை வந்த வல்லரசுக்கு காவல்துறையினர் குண்டடியே இணாமாக கிடைத்தது. வல்லரசுவினால் யார் யார் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்க‌ள் என்ற விவரங்களைச் சேகரித்து வரும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.