வட்டி வருவாய் மட்டுமே ரூ.3,430 கோடி…… அசத்தும் கோடக் மகிந்திரா வங்கி

 

வட்டி வருவாய் மட்டுமே ரூ.3,430 கோடி…… அசத்தும் கோடக் மகிந்திரா வங்கி

கோடக் மகிந்திரா வங்கி கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,596 கோடி ஈட்டியுள்ளது. அந்த காலாண்டில் அந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.3,430 கோடியாக உயர்ந்துள்ளது.

தனியார் வங்கியான கோடக் மகிந்திரா வங்கி இந்த நிதியாண்டின் 3வது காலாண்டு (2019 அக்டோபர்-டிசம்பர்) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. டிசம்பர் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,596 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கி நிகர லாபமாக ரூ.1,291 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

வருவாய்

2019 டிசம்பர் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கியின் மொத்த வருவாய் ரூ.8,077.03 கோடியாக உயர்ந்தது. இதில் நிகர வட்டி வருவாய் மட்டும் 17 சதவீதம அதிகரித்து ரூ.3,430 கோடியாக உயர்ந்துள்ளது. கோடக் மகிந்திரா வங்கியின் லாபம் மற்றும் வருவாய் உயர்ந்துள்ள போதிலும், அந்த வங்கியின் வாராக் கடன் உயர்ந்து இருப்பது சிறிது கவலைக்குரிய விஷயம்.

கோடக் மகிந்திரா வங்கி

2019 டிசம்பர் இறுதி நிலவரப்படி கோடக் மகிந்திரா வங்கியின் மொத்த வாராக் கடன் 2.46 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.89 சதவீதமாக உயர்ந்துள்ளது.