வட்டி வருவாய் அதிகமாக வந்தும் லாபம் குறைந்து போச்சு… பந்தன் பேங்க் தகவல்…

 

வட்டி வருவாய் அதிகமாக வந்தும் லாபம் குறைந்து போச்சு… பந்தன் பேங்க் தகவல்…

பந்தன் பேங்க் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.517 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 20.58 சதவீதம் குறைவாகும்.

தனியார் வங்கியான பந்தன் பேங்க் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. பந்தன் பேங்க் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.517 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற இதே காலாண்டைக் காட்டிலும் 20.58 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் பந்தன் பேங்கின் நிகர லாபம் ரூ.651 கோடியாக உயர்ந்துள்ளது.

பந்தன் வங்கி

2020 மார்ச் காலாண்டில் பந்தன் பேங்கின் நிகர வட்டி வருவாய் 33.57 சதவீதம் அதிகரித்து ரூ.1,680 கோடியாக உயர்ந்துள்ளது. அதே காலாண்டில் அந்த வங்கியின் வட்டியில்லாத வருவாய் 28.87 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.500 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி வருவாய் அதிகரித்துள்ளபோதிலும் அந்த வங்கியின் நிகர லாபம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பந்தன் வங்கி

2020 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பந்தன் வங்கியின் மொத்த வாராக் கடன் 1.48 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம் நிகர வாராக் கடன் 0.58 சதவீதமாக உள்ளது. மேலும் கடந்த மார்ச் இறுதிநிலவரப்படி பந்தன் வங்கி  திரட்டிய மொத்த டெபாசிட் 32 சதவீதம் அதிகரித்து ரூ.57,802 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் வழங்கிய மொத்த கடன் 60.46 சதவீதம் அதிகரித்து ரூ.71,846 கோடியாக உயர்ந்துள்ளது.