வடபழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை!

 

வடபழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை!

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது. 

ttn

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு, ஒருவரிடம் இருந்து 1 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும் தொட்டுப் பேசக் கூடாது என்றும் கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகமாகக் கூட்டம் கூடும் இடங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

ttn

இதன் எதிரொலியாக, நாட்டின் பல கோவில்கள் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. குறிப்பாகத் திருப்பதி, சபரிமலை, திருவனந்தபுரம் பத்மநாபர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடபழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, மருத்துவமனைக்குள் அனுமதிக்கப் படுகின்றனர் என்று அக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.