வடபழனி முருகன் அருளால் கிடைத்த குழந்தை.. மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி!

 

வடபழனி முருகன் அருளால் கிடைத்த குழந்தை.. மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி!

தமிழக பண்பாட்டாலும் கலாச்சாரத்தாலும் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டவர்கள் தமிழகத்துக்கு வந்து கோவில்களில் தரிசனம் செய்வதுண்டு.

தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் வெளிநாட்டவர்கள் வந்து தரிசிப்பதைப் பார்த்திருப்போம். தமிழக பண்பாட்டாலும் கலாச்சாரத்தாலும் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டவர்கள் தமிழகத்துக்கு வந்து கோவில்களில் தரிசனம் செய்வதுண்டு. குறிப்பாகத் தமிழக மக்கள் கடவுளிடம் கேட்கப் பட்ட கோரிக்கைகள் நிறைவேறிவிட்டால் முடிக் காணிக்கை செலுத்துவர். இதனைத் தமிழகத்திற்கு வரும் மக்களும் பின்பற்றி வருகின்றனர்.

ttn

இதே போல, பிரான்ஸில் வசித்து வரும் பிலோமினா என்ற பெண், சில ஆண்டுகளுக்குப் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலுக்கு யதேச்சையாக நண்பர்களுடன் வந்துள்ளார். இவருக்குத் திருமணம் ஆகி நீண்ட நாள் குழந்தை இல்லாத நிலையில், யாரோ இவரிடம் வடபழனி முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் உங்கள் வேண்டுதல் நடக்கும் என்று கூறியுள்ளனர்.

ttn

அதனைக் கேட்டுக் கொண்ட பிலோமினா வேண்டிக் கொண்டு மீண்டும் பிரான்ஸ்க்கு சென்றுவிட்டார். அங்குச் சென்ற ஒரே ஆண்டில் இவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த ஆனந்தத்தில் வேண்டுதலை மறந்த பிலோமினாவின் கனவில் முருகன் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இப்போது அந்த குழந்தைக்கு 3 வயது ஆகும் நிலையில், தமிழகம் வந்த பிலோமினா முருகன் கோவிலுக்குச் சென்று மொட்டையடித்து தன் வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார். இதனை அஸ்வத்தாமன் சேரன் என்ற நபர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பிலோமினாவின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.