வடதமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

 

வடதமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

வடதமிழகத்தில் இன்று முதல் 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை: வடதமிழகத்தில் இன்று முதல் 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை அல்லது இரவில் வலுப்பெற்று ஆம்பன் புயலாக மாறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ttn

அதனால் வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் வருகிற 20-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆம்பன் புயல் உருவான பிறகு அது தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் வெப்பநிலை உயரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வடதமிழகத்தில் இன்று முதல் 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.