‘வடசென்னை’-க்கு வேட்டு வைத்த தமிழ் ராக்கர்ஸ்!

 

‘வடசென்னை’-க்கு வேட்டு வைத்த தமிழ் ராக்கர்ஸ்!

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வடசென்னை’ திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் செய்துள்ளனர்.

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வடசென்னை’ திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் செய்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் ரிலீசான சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது. அதனை பலரும் டவுன்லோட் செய்துள்ளனர்.

vadachennai

வடசென்னை படத்தில் அன்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளதாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ்-தனுஷ் இடையிலான காதல், ஆண்ட்ரியாவின் சந்திரா கதாபாத்திரம் போன்றவை படத்தின் பலமாக இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. வடசென்னை படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுமார் ரூ.65 கோடி தயாரிப்பில் உருவான ‘வடசென்னை’ திரைப்படம், ஆன்லைனில் கசிந்துள்ளதால் படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து படத்தின் வசூல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.