வடக்கு ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து – பைலட் மற்றும் துணை பைலட் பலி!

 

வடக்கு ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து – பைலட் மற்றும் துணை பைலட் பலி!

வடக்கு ரஷியாவில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக விழுந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாஸ்கோ: வடக்கு ரஷியாவில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக விழுந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று வடக்கு ரஷ்யாவின் யமலோ-நேனெட்ஸ் தன்னாட்சி பிராந்தியத்தில் எம்.ஐ-8 என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் அதில் பயணித்த 2 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கைடன் தீபகற்பத்தில் இருந்து சபேட்டா துறைமுகத்திற்கு 3 குழு உறுப்பினர்கள் உட்பட 10 பேரை ஏற்றிக் கொண்டு ஹெலிகாப்டர் சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், சபேட்டா விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் கீழே விழுந்து நொறுங்கியது.

மேலும் தலைகீழான நிலையில் அந்த ஹெலிகாப்டர் பனி படர்ந்த பகுதியில் விழுந்தது. இதனால் அதன் முன்பகுதி பனிக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் பைலட் மற்றும் துணை பைலட் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர். மீதமிருந்த 8 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.