வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்ற ஆண்டை விட 12 விழுக்காடு அதிகம் பருவமழை பெய்யும்!

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்ற ஆண்டை விட 12 விழுக்காடு அதிகம் பருவமழை பெய்யும்!

தமிழகம், புதுச்சேரியில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் புயல் வீசியதால் காற்றின் திசைமாறி பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில்,  செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், ‘தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்.நடப்பாண்டில் இயல்பை விட 12 விழுக்காடு அதிகம் பருவமழை பெய்யும், அக்டோபரில் எதிர்பார்த்ததை விடக் குறைவான அளவே மழை பெய்துள்ளது’ என்று பாலசந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராயநகர், வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு விடிய விடிய மழை பெய்தது. ஏராளமான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.