வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வு

 

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வு

டெல்லியில் சிஏஏவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம்  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுகளை வீசினர். இருப்பினும் போராட்டம் ஓய்ந்த பாடில்லை.

Delhi riots

இதனால் 144 சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீசார் தலையிட்டு கலவரகாரர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தில் 250 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. 

 இந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீசார் 254 எப்.ஐ.ஆர்.-களை (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளனர்.டெல்லி காவல்துறையின் குற்ற பிரிவின்கீழ் இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக போலீசார் 900க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.