வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை விரைவில் திரும்பும்… மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை…….போலீஸ் தகவல்…

 

வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை விரைவில் திரும்பும்… மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை…….போலீஸ் தகவல்…

வடகிழக்கு டெல்லியில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என டெல்லி காவல்துறையின் சிறப்பு காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நேற்று தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தெரிவித்து டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று  வடகிழக்கு டெல்லியில் ஜஃபராபாத் ரயில் நிலையத்தின் கீழே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கூடி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்  நடத்தினர். இதற்கு பதிலடியாக குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் அந்த பகுதியில் கூடினர். 

வடகிழக்கு டெல்லி கலவரம்

அப்போது குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் கூட்டம் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. இதனையடுத்து போலீசார் கலவரகாரர்களை கடினமாக கையாண்டு அவர்களை விரட்டி அடித்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாட்களில் வடகிழக்கு டெல்லியில் பயங்கர கலவரங்கள் நடந்தன. கலவரகாரர்கள் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். மேலும், கொள்ளையடித்தனர் மற்றும் அப்பாவி பொது மக்களை ஆயுதங்களால் தாக்கினர்.

பொதுமக்களிடம் பேசும் டெல்லி சிறப்பு காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா

இதனையடுத்து டெல்லி போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தினர். நேற்று வடகிழக்கு டெல்லியில் எந்தவொரு கலவர சம்பவங்களும் நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் வடகிழக்கு டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை டெல்லி காவல்துறையின் சிறப்பு காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்களிடம் இயல்பு நிலை விரைவில் திரும்பிவிடும் மற்றம் மக்களுக்கு பயப்படவேண்டிய அவசியமில்லை என உறுதி அளித்தார்.