வசைபாடிய நெட்டிசன்களால் ப்ளூ சட்டை மாறன் எடுத்த திடீர் முடிவு?!

 

வசைபாடிய நெட்டிசன்களால் ப்ளூ சட்டை மாறன் எடுத்த திடீர் முடிவு?!

பல படங்களை விமர்சனம் செய்து வாங்கிக்கட்டிக்கொண்ட ப்ளூ சட்டை மாறன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை:  பல படங்களை விமர்சனம் செய்து வாங்கிக்கட்டிக்கொண்ட ப்ளூ சட்டை மாறன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

முன்னொரு காலத்தில் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்து மற்றவர்களுக்கு கதையை சொல்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தது. அனால் தற்போதுபடத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்பவர்களின் வீடியோக்களை யூ – ட்யூபில் பார்த்து விட்டு தான் திரைப்படத்திற்கே செல்லும் வழக்கத்தையும் சிலர் கடைப்பிடிக்கிறார்கள். இவர்களில் தனி நபர்களாக சேனல் ஆரம்பித்து பிரபலமானவர்கள் ‘ப்ளூசட்டை’ மாறன் மற்றும் பிரஷாந்த். 

bluse sattai

 
இதில் குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் மதுரை பேச்சு வழக்கில் ஒருபடத்தை யதார்த்தமாக அதே சமயம் எவ்வளவு குறைகூற முடியுமோ அந்த அளவிற்கு படத்தை கலாய்த்து தள்ளிவிடுவார். ஒவ்வொரு படத்தையும் இவர் எப்படி திட்டுகிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே பலர் இவரது விமர்சனத்தைப் பார்க்கின்றனர். இதனால் இயக்குநர்கள்  தயாரிப்பாளர்கள், சம்மந்தப்பட்ட நடிகரின் ரசிகர்கள் என பலரும் கடுப்பாகி அவருடன் மல்லுக்கட்டியுள்ளனர். இன்னும் சிலரோ “இவ்வளவு பேசுறீங்களே நீங்க ஒரு படம் எடுங்க பாப்போம்” என்று நாகரீகமாகவும் அநாகரீகமாகவும் இவரிடம் சவாலும் விட்டுள்ளனர். 

blue sattai

இந்நிலையில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.  ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்றும்  இப்படத்தில் நடிக்க விரும்புபவர்கள் தங்களுக்குப் புகைப்படங்களை மின்னஞ்சல் செய்யலாம் என்றும்  அறிவித்துள்ளார். மேலும் மே 13 முதல்  நேரில் சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார்.  ப்ளூ சட்டை மாறனின் இந்த அறிவிப்பால் பலர் அவர் எடுக்கப்போகும் படத்திற்காகக் காத்திருக்கின்றனர்.