வசூல் வேட்டையில் சிக்கிய சீரியல் நடிகர் | ‘செம்பருத்தி’, ‘பகல் நிலவு’, ‘வள்ளி’ சீரியல்கள் தொடருமா?

 

வசூல் வேட்டையில் சிக்கிய சீரியல் நடிகர் | ‘செம்பருத்தி’, ‘பகல் நிலவு’, ‘வள்ளி’ சீரியல்கள் தொடருமா?

பண மதிப்பிழப்பு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்று திரும்புகிற இடமெல்லாம் விரக்தியும், வேதனைகளுமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் போது, விதவிதமான முறைகளில் பணம் சம்பாதிக்க கிளம்பியிருக்கிறார்கள் வருங்கால யூத்துக்கள். இப்படி தான் நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு வந்தவர்களிடமும், நடைபயிற்சி செய்பவர்களிடமும் நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தனர் இரண்டு இளைஞர்கள்.

வசூல் வேட்டையில் சிக்கிய சீரியல் நடிகர் | ‘செம்பருத்தி’, ‘பகல் நிலவு’, ‘வள்ளி’ சீரியல்கள் தொடருமா?

பண மதிப்பிழப்பு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்று திரும்புகிற இடமெல்லாம் விரக்தியும், வேதனைகளுமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் போது, விதவிதமான முறைகளில் பணம் சம்பாதிக்க கிளம்பியிருக்கிறார்கள் வருங்கால யூத்துக்கள். இப்படி தான் நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு வந்தவர்களிடமும், நடைபயிற்சி செய்பவர்களிடமும் நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தனர் இரண்டு இளைஞர்கள். டிப் டாப் உடையில், ஆலந்தூரில் உள்ள ‘பூமி பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டையை மாட்டிக் கொண்டு காற்று வாங்க வந்தவர்களிடமும், தொந்தி குறைக்க அரை டவுசரில் மஞ்சள் வெய்யிலில் நனைய வந்தவர்களிடமும் உருக்கமாக பேசி நன்கொடை வசூலித்து சில்லறைகளைத் தேற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் அருண்குமார் என்பவர், இளைஞர்களின் ஐடி கார்டை பார்த்து விசாரித்துள்ளார். விசாரணையில், இவர்கள் அந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றவில்லை என தெரியவந்தது. இதையடுத்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவலர், இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் கோடம்பாக்கத்தை சேர்ந்த சையத் அலிகான் வயது 29, ராயப்பேட்டையை சேர்ந்த கவுதம் வயது 29 என்பது தெரியவந்தது. 

‘செம்பருத்தி’ ‘பகல் நிலவு’, ‘வள்ளி’ சீரியல்களில் நடித்து வரும் கைதான சையத் அலிகான் மற்றும் இவரது நண்பரும் சேர்ந்து ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இது போல் போலி ஐடி கார்டு தயாரித்து அணிந்து கொண்டு பலரிடம் நன்கொடை வசூலித்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் இருந்து நன்கொடையாக வசூலித்த 8 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்துறை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.