வசூலில் பட்டையை கிளப்பும் பேட்ட; உண்மை நிலவரம் என்ன?-அதிகாரப்பூர்வ வீடியோ

 

வசூலில் பட்டையை கிளப்பும் பேட்ட; உண்மை நிலவரம் என்ன?-அதிகாரப்பூர்வ வீடியோ

பேட்ட படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது

சென்னை: பேட்ட படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான  பேட்ட, தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் கடந்த 10-ம் தேதி வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

ஹாஸ்டல் வார்டனாக தலைவர் நடித்துள்ள பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் ரஜினி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினியின் அருணாச்சலம், அஜித்தின் ராசி ஆகிய படங்கள் 3 நாள் இடைவெளியில் மோதின. ஆனால், முதல் முறையாக ரஜினி, அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளியானதால், எந்தப் படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அதேபோல் தமிழகத்தில் பேட்ட படத்தின் வசூல் சாதனையை அஜித்தின் விஸ்வாசம் முறியடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், பேட்ட படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் சன்பிக்சர்ஸ் பதிவிட்டுள்ளது.

வீடியோவில் பேசியிருக்கும் திருப்பூர் சுப்ரமணியம் , வருகிற ஞாயிற்றுக்கிழமையோடு அதாவது பேட்ட படம் வெளியான 11 நாட்களில் தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும். இது உண்மையான நிலவரம் என்று தெரிவித்துள்ளார். பேட்டியின் போது படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் உடன் உள்ளார்.