வசந்த காலத்தை வித்தியாசமாக வரவேற்ற சுவிட்சர்லாந்து மக்கள்!

 

வசந்த காலத்தை வித்தியாசமாக வரவேற்ற சுவிட்சர்லாந்து மக்கள்!

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் குளிர்காலங்களின் போது, மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு முடங்கும். அதிக பனிப்பொழிவு காரணமாக, வீட்டை விட்டு வெளியேறுவது, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை மக்கள் சந்திக்கின்றனர்

சூரிச்: ஸ்னோ மேன் பொம்மையை எரித்து வசந்த காலத்தை வித்தியாசமான முறையில் சுவிட்சர்லாந்து மக்கள் கொண்டாடியுள்ளனர்.

இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலம் என்பது மிதவெப்பமண்டல இடங்களில் காணப்படும் நான்கு பருவ காலங்களில், குளிர்காலத்திற்கும், கோடைகாலத்திற்கும் இடையில் வரும் காலமாகும். புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வசந்த காலம் வருகிறது.

snowman

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் குளிர்காலங்களின் போது, மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு முடங்கும். அதிக பனிப்பொழிவு காரணமாக, வீட்டை விட்டு வெளியேறுவது, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை மக்கள் சந்திக்கின்றனர். எனவே, குளிர் காலம் முடிந்து வரக்கூடிய வசந்தகாலம் அவர்களுக்கு மிகவும் இனிமையான ஒன்றாக இருக்கும். அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் வரவேற்கின்றனர்.

snowman

அந்தவகையில், சுவிட்சர்லாந்து என்றாலே உடனே நினைவுக்கு வரும் சாக்லேட், கடிகாரங்கள் மற்றும் கத்திகள் போல, இங்கு நிலவும் பசுமையான சூழல், வெண்பனி போர்த்திய ஆல்ப்ஸ் மலைத் தொடர் மற்றும் குளிரும் உடனே நினைவுக்கு வரும். நம்மூரில் குளிரை சுவிட்சர்லாந்துடன் ஒப்பிட்டு பேசுவது வழக்கம்.

snowman

இந்நிலையில், வசந்த காலத்தை வித்தியாசமான முறையில் வரவேற்று சுவிட்சர்லாந்து மக்கள் கொண்டாடியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ஏதேனும் ஒரு திங்கள்கிழமை வசந்தகாலத்தை வரவேற்கும் கொண்டாட்டங்கள் அந்நாட்டில் நடைபெறும்.

snowman

அதன்படி, 5,000 கிலோ எடை கொண்ட மரத்துண்டுகளை வைத்து, 3.40 மீட்டர் உயரமும், 100 கிலோ எடையும் கொண்ட Boogg என்ற ஸ்னோ மேன் பொம்மை உருவாக்கப்பட்டது. 1.80 மீட்டர் சுற்றளவு கொண்ட தலைப்பகுதியில் வெடிபொருட்கள் வைத்து உருவாக்கப்பட்ட அந்த பொம்மையை எரித்து அந்நாட்டு மக்கள் வசந்த காலத்தை வித்தியாசமான முறையில் வரவேற்று கொண்டாடினர். நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3,500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் வாசிங்க

பட்டயாவுக்கு போயிருக்கிங்களா ? அடுத்தமுறை போனால் ‘பிங்பாங் பாங்காக்’கேமை மிஸ் பண்ணிறாதீங்க !