வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது: ராஜேந்திர பாலாஜி பகீர் பேச்சு!

 

வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது: ராஜேந்திர பாலாஜி பகீர் பேச்சு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை  திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் ஆரம்பித்து விட்டன

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை  திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் ஆரம்பித்து விட்டன. அதன்படி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மல்லியில் உள்ளாட்சித் தேர்தல்  தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

rajenthirabalaji

அப்போது, அதிமுகவிலிருந்து போனவர்கள்  மீண்டும் இங்கேயே வந்துவிட்டார்கள். இது அண்ணன், தம்பி சண்டை மாதிரி தான். இங்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அதனால் சண்டை இருக்க தான் செய்யும். உள்ளாட்சி தேர்தலில் வசதி வாய்ப்பு இல்லாத வயதானவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது. இது கம்ப்யூட்டர் காலம். இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்.

rajenthirabalaji

திமுகவில் சீட் கேட்க கூட ஆட்கள் இல்லை. அந்த கட்சி அழிந்து வருகிறது. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் சங்கை நசுக்கி பிடித்தோம். அவர்கள் பயத்தில் விட்டால் போதும்னு  8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஜெயித்தார்கள். சங்கை இன்னும் இறுக்கி பிடித்திருந்தால் சோலி முடிஞ்சிருக்கும் அ.தி.மு.க ஜெயித்திருக்கும்’ என்று சகட்டுமேனிக்கு பேசி தள்ளியுள்ளார்.