வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முதலமைச்சரின் மருமகன்!

 

வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முதலமைச்சரின் மருமகன்!

மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மருமகன் ரத்துல் புரி 354 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கமல்நாத்தின் தங்கை மகன் ரத்துல் புரி. இவரது தந்தை‌ தீபக் புரி, மோசர்பெர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் 2012ஆம் ஆண்டு வரை நிர்வாக இயக்குனராக இருந்து வந்த‌ ரத்துல் புரி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 354 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

Kamal Nath

வங்கிக் கடன் பெற்றதில் ரத்துல் புரி அவரது தந்தை தீபக் புரி மற்றும் தாய் நீடா புரி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் ரத்துல் புரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தினத்திடமிருந்து விவிஐபிக்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாகவும் ரத்துல் புரியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர், வங்கி மோசடி வழக்கில்‌ ‌கைது செய்யப்பட்டுள்ளார்.