வங்கி சேவை மையங்களாக மாறிய தபால் நிலையங்கள்! இதுதாங்க டிஜிட்டல் இந்தியா…

வங்கி சேவை மையங்களாக மாறிய தபால் நிலையங்கள்! இதுதாங்க டிஜிட்டல் இந்தியா…

வங்கிக்கு செல்லாமலும் பாஸ்புக் மற்றும் ஏ.டி.எம். அட்டை இல்லாமலும் ஆதார் எண்ணைக் கொண்டு பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய திட்டம் அஞ்சல்துறை சார்பில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கு செல்லாமலும் பாஸ்புக் மற்றும் ஏ.டி.எம். அட்டை இல்லாமலும் ஆதார் எண்ணைக் கொண்டு பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய திட்டம் அஞ்சல்துறை சார்பில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு தொடங்குவதும், அதில் நிரந்தர வைப்புத்தொகை வைப்பதும் அண்மை காலமாக குறைந்துகொண்டு வருகிறது. டிஜிட்டல் மயமாதல் மற்றும் வங்கிகளின் துரித சேவைகளே அதற்கு காரணம் என்று சொல்லலாம். கிராமங்களில் உள்ள மக்கள் மட்டும் வங்கி சேவைகள் கிடைக்கப்பெறாமலும், பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் குக்கிராமங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

Post office

தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 121 தபால் நிலையங்கள் வங்கி சேவை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் 8 ஆயிரத்து 580க்கும் மேற்பட்டவை கிராமபுறங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வங்கி பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் வகையில் ஆதார் எண் மூலம் பணம் எடுக்கும் aadhar enabled payment service என்ற புதிய திட்டம் அஞ்சல்துறை சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிக்கு செல்லாமல், வங்கி பாஸ் புக் அல்லது ஏ.டி.எம்.கார்டு இல்லாமல் பண பரிவர்தனை செய்யமுடியும். அதற்கு வாடிக்கையாளரின் வங்கி கணக்கு ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.