வங்கி கழிவறையில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை .. பணிச்சுமை தான் காரணமா? போலீசார் தீவிர விசாரணை!

 

வங்கி கழிவறையில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை .. பணிச்சுமை தான் காரணமா? போலீசார் தீவிர விசாரணை!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள  அரிட்டாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காவலர் யோகேஸ்வரன்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள  அரிட்டாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காவலர் யோகேஸ்வரன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆயுத படை காவலராகி 2018 ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் புதூரிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் இணைந்துள்ளார். 

ttn

இவர் இன்று காலை சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். காலை 10 மணி அளவில் வங்கியின் கழிவறைக்குச் சென்று உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட இவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்குச் சென்ற போலீசார், யோகேஷ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

இச்சம்பவம் பற்றிப் பேசிய சக போலீசார், “யோகேஸ்வரனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். சிவகங்கை ஆயுதப்படை கட்டுப்பாட்டில் மொத்தம் 700 போலீசார் பணியாற்றி வருகிறோம். தென் மாவட்டங்களில் என்ன நடந்தாலும் உடனே ஆயுதப்படையினர் தான் அங்கே போக வேண்டும். யோகேஸ்வரன் பணிச் சுமையின் காரணமாகத் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பார்” என்று தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் யோகேஸ்வரன் பணிச்சுமை காரணமாகத் தான் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.