வங்கி இ.எம்.ஐ-களை ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

 

வங்கி இ.எம்.ஐ-களை ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு காரணமாக பல தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோ ஏர் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 25 சதவிகித சம்பளம் பிடித்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வங்கி கடன் தவணைகளை ஆறு மாத காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக பல தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோ ஏர் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 25 சதவிகித சம்பளம் பிடித்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலைமை மோசமானால் வேறுவிதமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று அந்த நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக யோசித்து வருகின்றன. இதனால் பொது மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

 

இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில் அனைத்து வகை வங்கிக் கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்.  இந்த காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுத்துறை வங்கி அதிகாரிகளை தமிழக முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும்!
கேரளத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்  வங்கி அதிகாரிகளை அழைத்துப் பேசியுள்ளார். அவர்களும் சாதகமாக பதிலளித்துள்ளனர். அவரது நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதே போல் தமிழக முதல்வரும் செய்து அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும்!” என்று கூறியுள்ளார்.