வங்கி இணைப்பால் வாடிக்கையாளர்களுக்கு பிரச்னையா?

வங்கி இணைப்பால் வாடிக்கையாளர்களுக்கு பிரச்னையா?

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன், மகிளா வங்கி உள்ளிட்ட 5 துணை வங்கிகள் கடந்த 2017ஆம் ஆண்டு இணைக்கப்பட்டன. இந்தியாவின் வங்கி இணைப்பு வரலாற்றில் இது மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இதன் பிறகு கடந்த ஆண்டு விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. 

sbi

இந்நிலையில் வங்கிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு தற்போதும் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு வங்கியுடன் மற்றொரு வங்கி இணைக்கப்படுவதற்கான நடைமுறைகள் முடிவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒன்பது மாதங்கள் வரையில் ஆகலாம். இணைக்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில், எந்த வங்கியில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களோ, அதன் கீழே மற்ற வங்கிகள் இணைக்கப்படும். எந்தவொரு வங்கியின் கீழ் பிற வங்கிகள் இணைகிறதோ, அந்த வங்கியின் பெயரிலேயே தொடர்ந்து செயல்படும். ஒரு வங்கியுடன் இணையும் மற்ற வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் முதலில் சரிபார்க்கப்படும். பின்னர், அந்த தகவல்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இணையும் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு, லாக்கர் வசதிகள், ஃபிக்ஸ்டு டொபாசிட்டுகள், வங்கிக் கடன்கள், ஏடிஎம் கார்டு போன்றவை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரப்பூர்வமான கடிதம் அல்லது மின்னஞ்சல் வரும். போலி மின்னஞ்சல்கள் வர வாய்ப்புள்ளது என்பதால், அவசரப்பட்டு வங்கிக் கணக்கு, ஐடி மற்றும் பின் நம்பர் உள்ளிட்டவற்றை தெரியாத நபர்களுக்கு அனுப்ப வேண்டாம். வங்கிக் கடன் வாங்கியிருந்தாலோ அல்லது ஃபிக்ஸ்டு டெபாசிட்டுகளில் பணம் போட்டு வைத்திருந்தாலோ, உங்கள் வங்கி வேறொரு வங்கியுடன் இணைக்கப்படும் போது அவற்றில் மாற்றங்கள் இருக்கலாம். அப்படி மாற்றங்கள் இருந்தால் தொடர்புடைய புதிய வங்கியே அதுகுறித்து தெரியப்படுத்தும். 

bank account

வங்கிகள் இணைக்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு தரமான வங்கிச் சேவை கிடைக்கப் பெறும். ஒரு வங்கியுடன் இணையும் மற்றொரு வங்கியின் நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை மூடப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் குறைப்பும் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு என்கிறார்கள் வங்கியாளர்கள்.