வங்கியின் அலட்சியத்தால் ரூ40 லட்சம் தொகுதி நிதி அம்பேல்! திடீர் லட்சாதிபதியான குடும்பம்!

வங்கியின் அலட்சியத்தால் ரூ40 லட்சம் தொகுதி நிதி அம்பேல்! திடீர் லட்சாதிபதியான குடும்பம்!

ஆட்டோ ஓட்டுநர்கள் மறதியால் பயணிகள் வைத்த கிலோ கணக்கான நகைகளை திரும்ப ஒப்படைத்த செய்திகளைப் படித்திருக்கிறோம். பள்ளி சிறுவர்கள், பள்ளி செல்லும் சாலைகளில் ரோட்டில் கிடந்த விலைமதிக்க முடியாத பொருட்களை அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால், தனது வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.40 லட்சத்தை திரும்ப தராமல் செலவு செய்த ஒருவர், தற்போது சிறைச்சாலையில் குடும்பத்தோடு இருக்கிறார். 

cash

திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள பொதுத்துறை வங்கியிலிருந்து ஊழியர்களின் தவறுதலால், ராக்கியா பாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் (50) என்பவரது வங்கிக் கணக்கிற்கு ரூ.40 லட்சம் சென்று விட்டது. இந்த தவற்றை தாமதமாக அறிந்த வங்கி நிர்வாகம் ரூ.40 லட்சத்தை திருப்பி தருமாறு குணசேகரனிடம் கேட்டுள்ளது. 
ஆனால் அவர் தவறுதலாக வந்த ரூ.40 லட்சம் பணத்தை எடுத்து சொத்துக்களை வாங்கி, மகளுக்கும் பிரம்மாண்டமாக திருமணம் செய்திருக்கிறார்.  லட்சாதிபதிகளாக வாழ்ந்த அவர்கள், பணத்தை செலவழித்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த பணமோசடி குறித்து வங்கி உதவி மேலாளர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குணசேகரன், அவரது மனைவி ராதா (45) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

jail

இந்த வழக்கில், பணத்தை திருப்பிச் செலுத்தாத குணசேகரன், ராதா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.   பின்னர் விசாரணையில், இந்த ரூ.40 லட்சம் ரூபாய் பணமும், நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப் பணித் துறை ஒதுக்கிய பணமாகும். பொதுப் பணித்துறை செயல்பொறியாளரின் வங்கி எண்ணுக்குப் பதிலாக வங்கியில் அலட்சியமாக குணசேகரனின் வங்கி எண்ணுக்கு ரூ.40 லட்சம் ரூபாய் மாற்றியிருக்கிறார்கள்.