வங்கிக்கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை திருப்பி அளிக்காததால் 3 ஆண்டுகள் சிறை!

வங்கிக்கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை திருப்பி அளிக்காததால் 3 ஆண்டுகள் சிறை!

திருப்பூரில் உள்ள தம்பதியினரின் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த 40 லட்சத்தை திருப்பி அளிக்காததால் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

திருப்பூரில் உள்ள தம்பதியினரின் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த 40 லட்சத்தை திருப்பி அளிக்காததால் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

Jail

கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுபணித்துறைக்கு செல்ல வேண்டிய பணத்தை மாற்றி, திருப்பூர் கார்பரேஷன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் குணசேகரன் கணக்கில் சென்றது. வெகு நாட்களாக தனது கணக்கில் அந்த 40 லட்சம் ருபாய் பணத்தை பெறாததால் பொதுப் பணித்துறை வங்கியிடம் விசாரணை செய்தது. சோதித்து பார்க்கையில் அந்த 40 லட்சம் ரூபாய்  குணசேகரன் கணக்கிற்கு சென்றது தெரிய வந்தது. உடனே பொது பணித் துறை அந்த பணத்தை திருப்பி தருமாறு குணசேகரனிடம் கூறினர். ஆனால், பணத்தை திருப்பி தராத குணசேகரன் அந்த பணத்தில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.   

Jail

இது குறித்து கார்பரேஷன் வங்கி மேலாளர் 2015 ஆம் ஆண்டு அத்தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்தார். நேற்று அந்த வழக்கு  திருப்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் குணசேகரன் மற்றும் ராதா தம்பதியினருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.