வங்கிகளை ஆண்டியாக்கும் மோடியின் முத்ரா திட்டம்! மலை போல் குவிந்த வாராக்கடன் 

 

வங்கிகளை ஆண்டியாக்கும் மோடியின் முத்ரா திட்டம்! மலை போல் குவிந்த வாராக்கடன் 

பொதுத்துறை வங்கிகள் முத்ரா திட்டத்தின்கீழ் கொடுத்த கடனில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் வாராக் கடனாக மாறி விட்டது. 

npa in mudra scheme loans

பொதுத்துறை வங்கிகள் முத்ரா திட்டத்தின்கீழ் கொடுத்த கடனில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் வாராக் கடனாக மாறி விட்டது. 

mudra

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட்டதுதான் பிரதான் முத்ரா  யோஜனா திட்டம்(பி.எம்.எம்.ஒய்.) 2015-16ம் நிதி ஆண்டில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. பொதுத்துறை வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் வாயிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 லட்சத்துக்கும் குறைவாக கடன் தேவைப்படும் உற்பத்தி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் முத்ரா திட்டத்தின்கீழ் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

முத்ரா திட்டம் நடைமுறைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 1.5 கோடி நிறுவனங்கள் பலன் அடைந்தன.  முத்ரா திட்டம் சிறு தொழில் முனைவோருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. அதேவேளையில் இந்த திட்டத்தில் கடனை வாங்கிய பலர் முறையாக திரும்ப செலுத்தாமல் டேக்கா கொடுத்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் முத்ரா திட்டத்தின்கீழ் கொடுத்த கடனில் எவ்வளவு வாராக்கடன் உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பதில் அளிக்கும்படி தி வயர்  மனு தாக்கல் செய்து இருந்தது.

mudra

தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, முத்ரா திட்டத்தின்கீழ் கொடுத்த கடனில் வாராக் கடன் ரூ.16,481.45 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் வாராக் கடன் ரூ.9,204.14 கோடி உயர்ந்துள்ளது. 2018 மார்ச் இறுதியில் வங்கிகள் முத்ரா திட்டத்தின்கீழ் கொடுத்த கடனில் வாராக் கடன் அளவு ரூ.7,277.31 கோடியாக இருந்தது.

முத்ரா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளில் 30.57 லட்சம் வாராக்கடன் கணக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.