வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் டெபாசிட்டுகள் ரூ.14,578 கோடி! உங்க பணம் இருந்தால் திரும்பி வாங்கிக்கலாம்

 

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் டெபாசிட்டுகள் ரூ.14,578 கோடி! உங்க பணம் இருந்தால் திரும்பி வாங்கிக்கலாம்

வங்கிகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் டெபாசிட்டுகளின் மதிப்பு 2018ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்து ரூ.14,578 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வங்கி கணக்கில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்த கணக்கில் இருக்கும் தொகை உரிமை கோரப்படாமல் கிடக்கும் டெபாசிட்டாக கருதப்படும். அந்த டெபாசிட் தொகை மற்றும் அதற்கான வட்டியோடு சேர்த்து ரிசர்வ் வங்கி உருவாக்கிய வைப்புநிதியாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியத்துக்கு (டி.இ.எ.எப்.) மாற்றப்படும். ஒருவேளை டெபாசிட் பணம் டி.இ.எ.எப்.-க்கு மாற்றிய பிறகு வாடிக்கையாளர் தங்களது பணத்தை கேட்டால் வங்கிகள் டி.இ.எ.எப்.யிடம் திரும்ப வாங்கி அந்த தொகையை (வட்டியுடன்) வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டும்.

டெபாசிட் பணம்

வங்கிகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் டெபாசிட்டுகள் குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்தார். அதில், கடந்த 2018ம் ஆண்டில் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் டெபாசிட் 26.8 சதவீதம் அதிகரித்து ரூ.14,578 கோடியாக இருந்தது. 2017 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இது முறையே ரூ.11,494 கோடி மற்றும் 8,928 கோடியாக இருந்தது.

நிர்மலா சீதாராமன்

ஸ்டேட் வங்கியில் மட்டும் அதிகபட்சமாக ரூ.2,156.33 கோடி மதிப்புக்கு டெபாசிட் தொகைகள் யாரும் கேட்காமல் கேட்பாரற்று கிடக்கிறது. 2018 செப்டம்பர் இறுதி நிலவரப்படி, ஆயுள் காப்பீடு துறையில் ரூ.16,887.66 கோடி உரிமை கோரப்படாமல் இருக்கிறது. ஆயுள் சாரா காப்பீடு பிரிவில் ரூ.989.62 கோடி கேட்பாரற்று கிடக்கிறது என கூறப்பட்டுள்ளது.