வங்கதேச தேர்தலில் வன்முறை…. 5 பேர் பலி

 

வங்கதேச தேர்தலில் வன்முறை…. 5 பேர் பலி

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறையின்போது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

டாக்கா: வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறையின்போது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேச நாட்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியுள்ளது. பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்கதேச தேசியவாத கட்சி ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.