வங்கதேசிகள் இந்தியாவுக்குள் வந்ததை இந்தியாவால் நிரூபிக்க முடியுமா? – வங்கதேச பிரதமரின் ஆலோசகர் சவால்

 

வங்கதேசிகள் இந்தியாவுக்குள் வந்ததை இந்தியாவால் நிரூபிக்க முடியுமா? – வங்கதேச பிரதமரின் ஆலோசகர் சவால்

ந்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க கொந்தளிப்பான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வசிக்கிறார்கள் என்பதை இந்தியாவால் நிரூபிக்க முடியுமா என்று வங்கதேசம் சவால் விடும் அளவுக்கு இந்தியாவின் நிலை சென்றுவிட்டது.

இந்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க கொந்தளிப்பான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வசிக்கிறார்கள் என்பதை இந்தியாவால் நிரூபிக்க முடியுமா என்று வங்கதேசம் சவால் விடும் அளவுக்கு இந்தியாவின் நிலை சென்றுவிட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு உலக நாடுகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்டத்தை கொண்டுவந்த அமித்ஷா, மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கோரிக்கைகள் வந்துள்ளன. பல அமெரிக்க இந்திய வம்சாவளி எம்.பிக்கள் கூட இந்த சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மலேசியப் பிரதமர் நேரடியாகவே இந்தியா மீது குற்றம்சாட்டினார். இந்தியா கொண்டுவந்தது போன்ற ஒரு சட்டத்தை மலேசியா கொண்டுவந்தால் மலேசியாவில் இந்தியர்கள் வசிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மலேசியாவில் அதிக அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். இது அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு சிக்கலைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. மற்ற இஸ்லாமிய நாடுகளும் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Malaysia-pm

இந்த நிலையில், இந்தியாவின் உதவியால் சுதந்திரம் பெற்ற வங்கதேசம் கூட இந்தியாவை நோக்கி சவால் விடும் நிலை ஏற்பட்டது பரபரப்பை உருவாக்கியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும், இது அண்டைநாடுகளை பாதிக்கும் என்று கவலை தெரிவித்திருந்தார். 

Fakruddin-AHmed

வங்கதேச  பிரதமர் ஷேக் அசீனாவின் மூத்த ஆலோசகர் கூறுகையில், “முறையான ஆவணமின்றி வங்கதேச இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் குடியேறி இருந்தால் அது பற்றி இந்திய அரசு எங்களுக்குத் தெரிவிக்கலாம். இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொரு வங்கதேச குடிமகனையும் நாங்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். ஆனால், இந்தியா அவர்கள் சட்டவிரோதமாக குடிபுகுந்தார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மற்றபடி குடியுரிமை சட்டம் என்பது எல்லாம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்” என்று சவால்விடுவதுள்ளார். அதேபோல், வங்கதேசத்தில் வசிக்கும் சட்டவிரோத இந்தியக் குடியேறிகளை நாங்களும் வெளியேற்றுவோம் என்று அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்திகள் பரவி வருகிறது. இந்த விவகாரம் இன்னும் எவ்வளவு பெரிதாக மாறுமோ என்ற கவலை பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.