வங்கதேசத்தை புரட்டியெடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள்.. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 493/6

 

வங்கதேசத்தை புரட்டியெடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள்.. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 493/6

India-vs-Bangladesh-Test-match

வங்கதேச அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்து 343 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்கதேச அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் 150 ரன்களுக்குள் சுருண்டது. 

indvsbangla

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 86/1 என்ற நிலையில் இருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு புஜாரா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

kholiout

அடுத்து வந்த கேப்டன் கோலி டக் அவுட் ஆகி மேலும் அதிர்ச்சியை கொடுத்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த மயங்க் அகர்வால் சதம் கண்டார். இவருடன் ஜோடி சேர்ந்த ரஹானே அரைசதம் கண்டார். ரகானே சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

indvsban

பின்னர் வந்த ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த அகர்வால், டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அரைசதம் கண்டார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 493 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணியை விட 343 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. களத்தில் ஜடேஜா 60 ரன்களுடனும் உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் இருக்கின்றனர்.