வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தம்! வானிலை மையம் அறிவிப்பு!

 

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தம்! வானிலை மையம் அறிவிப்பு!

இந்தாண்டு மழை இடையூறு செய்யாமல் தீபாவளியை மக்கள் கொண்டாடினார்கள்.

தமிழகத்தில் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றிருக்கும் நிலையில் இந்தாண்டு மழை இடையூறு செய்யாமல் தீபாவளியை மக்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில், வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியிலும், இலங்கையின் தெற்கு திசையிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

rain

இந்த காற்றழுத்தம் தற்போது குமரி கடலை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த இரு தினங்களில் இந்த குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று இம்மாதம் 30, 31 தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு,  மாலத்தீவு போன்ற பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத்தினால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.