வங்கக்கடலில் புயல் சின்னம் ஏதும் உருவாகவில்லை : வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி !

 

வங்கக்கடலில் புயல் சின்னம் ஏதும் உருவாகவில்லை : வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி !

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், அடுத்த 48 மணி நேரத்திற்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதில் புதுச்சேரி, சென்னை, நீலகிரி, கோவை, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம்,  கடலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்தார். 

rain

அதனைத் தொடர்ந்து, வங்கக்கடலில் புயல் சின்னம் ஏதும் உருவாகவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8% அதிகமாக மழைப் பதிவாகியுள்ளது என்றும்  சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை நீடிக்கும். லட்சத்தீவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சூறாவளிக்காற்று வீசுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.