லோன் வாங்க லஞ்சம்… பட்டப்பகலில் துப்பாக்கியுடன் வந்து கனரா வங்கி மேனேஜர், தரகரை தாக்கியவர் கைது!

 

லோன் வாங்க லஞ்சம்… பட்டப்பகலில் துப்பாக்கியுடன் வந்து கனரா வங்கி மேனேஜர், தரகரை தாக்கியவர் கைது!

கோயமுத்தூரில் வங்கியில் கடன் வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றிய நபரையும் தடுக்க வந்த மேலாளரையும் துப்பாக்கி, கத்தியால் தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயமுத்தூர் சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர். நேற்று பிற்பகல் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த வெற்றிவேலன் என்பவர் வேகவேகமாக வங்கிக்குள் நுழைந்துள்ளார்.

கோயமுத்தூரில் வங்கியில் கடன் வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றிய நபரையும் தடுக்க வந்த மேலாளரையும் துப்பாக்கி, கத்தியால் தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயமுத்தூர் சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர். நேற்று பிற்பகல் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த வெற்றிவேலன் என்பவர் வேகவேகமாக வங்கிக்குள் நுழைந்துள்ளார். மேனேஜர் சந்திரசேகருடன் பேசிக்கொண்டிருந்த நபரை சரமாரியாக தாக்க ஆரம்பித்தார். அதைத் தடுக்க வந்த சந்திரசேகருக்கும் அடி உதை விழுந்தது.

canara bank

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ஓடிவந்து வெற்றிவேலனைப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது தன்னிடமிருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு அந்த நபரை விடாமல் அடித்தார். ஆத்திரம் தீர அடித்த அவர் பிறகு அவசர அவசரமாக வெளியேறி தப்பினார். துப்பாக்கி, கத்தி வைத்திருந்ததால் அவர் அருகில் செல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை.
இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் மேலாளர் சந்திரசேகர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகளை பெற்று போலீசார் விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய வெற்றிவேலையும் கைது செய்தனர். 
ஏன் இப்படி தாக்கினார் என்று விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. வெற்றிவேலன் வாகனத்திற்கான உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வந்துள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக லோன் கேட்டு கனரா வங்கியில் விண்ணப்பித்துள்ளார். குணபாலன் என்பவர் எப்படியும் லோன் வாங்கித் தந்துவிடுகிறேன் என்று கூறி வெற்றிவேலிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். 
ஆனால், வெற்றிவேலன் ஏற்கனவே ஆந்திரா வங்கியில் கடன் பெற்றுவிட்டு திரும்ப செலுத்தவில்லை. அவரது வங்கிக் கணக்கு, கடன் விவரம் எதுவும் சரியில்லை. சிபில் ஸ்கோர் மிகவும் குறைவாக உள்ளதால் கடன் அளிக்க முடியாது என்று சந்திரசேகர் கூறியிருக்கிறார். ஆனால், இந்த தகவலை குணபாலன் மறைத்துவிட்டார். பணம் வந்துவிடும் என்று கூறி சில மாதங்கள் ஓட்டிவிட்டார். லோன் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை வாங்கிய பணத்தை திரும்பத் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அதையும் குணபாலன் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். அந்த கோபத்தில் அடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

canara bank

வெற்றிவேலனிடமிருந்து ஏர் பிஸ்டல், கத்தி, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இடைத்தரகர் குணபாலனுக்கும் மேலாளர் சந்திரசேகருக்கும் நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இருந்துள்ளதால், அவருக்கும் கமிஷனில் பங்கு சென்றுள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.