லோக் ஆயுக்தா தேர்வுக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்

 

லோக் ஆயுக்தா தேர்வுக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்

லோக் ஆயுக்தா தேர்வுக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது

சென்னை: லோக் ஆயுக்தா தேர்வுக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் லோக்ஆயுக்தா சட்டம் கடந்த ஜூலை 9-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்படி அமைக்கப்பட உள்ள லோக் ஆயுக்தாஅமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர் உள்ளனர்.

இந்த தேர்வுக்குழுவானது, தகுதிவாய்ந்த நபர்களை பரிந்துரை செய்வதற்காக சர்ச் கமிட்டி எனப்படும் தேடுதல் குழுவை நியமிக்கும். இந்த தேடுதல் குழுவானது தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, தேர்வுக் குழுவிடம் வழங்கும். பின்னர் தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில் லோக்ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.

இந்நிலையில், லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய குழு நியமிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் சடப்பேரவையில் ஆலோசனை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பணியாளர், நிர்வாக சீர்த்திருத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று தமிழக அரசு பணியாளர், நிர்வாக சீர்த்திருத்துறை செயலாளருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழகத்தில் அமைய இருக்கும் லோக் ஆயுக்தா அமைப்பு அதிகாரமற்றது. ஊழல் புகாருக்கு ஆளான முதல்வர், கூட்டத்தில் பங்கேற்பது ஊழலை ஒழிக்க உதவாது என குறிப்பிட்டிருந்தார். எனவே இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.