லோக்பால் அமைப்பின் முதல் தலைவராகப் பதவியேற்றார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ்

 

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராகப் பதவியேற்றார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ்

லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்

உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

PC Gosh

முன்னதாக, லோக்பால் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது, பிப்ரவரி மாத இறுதிக்குள் லோக்பால் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு விரைவில் பெயர்கள் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

இதனையடுத்து லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது அந்த அமைப்புக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

உறுப்பினர்கள் பதவியேற்பு 

அந்த அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார். 66 வயதாகும் நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடந்த 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 2017 ஜூன் 29 முதல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.

Lokpal members

சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) துணை ராணுவப் படையின் முன்னாள் தலைவர் அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிர மாநில முன்னாள் தலைமைச் செயலர் தினேஷ் குமார் ஜெயின், மகேந்திர சிங், இந்திரஜித் பிரசாத் கெளதம் ஆகியோர் லோக் பால் அமைப்பின் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

அந்த அமைப்பின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.