லோக்கல் சேனலில் திரையிடப்பட்ட தர்பார்! வருத்தத்தில் லைகா!! 

 

லோக்கல் சேனலில் திரையிடப்பட்ட தர்பார்! வருத்தத்தில் லைகா!! 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக தமிழகத்தில் நேற்று வெளியானது.

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக தமிழகத்தில் நேற்று வெளியானது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு பின்னர் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்திருந்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது. வெளியீட்டுக்கு முன்னரே உலகளாவிய தியேட்டரிக்கல் மற்றும் நான் தியேட்டரிக்கல் உரிமத்தில், ரூ .200 கோடி கிளப்பில்  ஏற்கனவே இணைந்துவிட்டது. இந்நிலையில் முதல்நாளில் மட்டும் தர்பார் படம் உலக அளவில் 100 கோடிக்கும் மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது. ஆனால் அதே நேரத்தில் தர்பார் வெளியான சில நிமிடங்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் வெளிவந்தது. 

தர்பார்

இந்நிலையில் தர்பார் திரைப்படம் மதுரையில் உள்ளூர் கேபிள் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ரஜினி மக்கள் மன்ற வழக்கறிஞர் அணியை சேர்ந்த விஜய் என்பவர், திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மதுரை மாவட்டம் சிந்துபட்டி பகுதியில் சரண்யா என்ற உள்ளூர் கேபிள்  சேனலில் நேற்று இரவு தர்பார் படம் ஒளிபரப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தடை விதித்து, அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக திருமங்கலம் காவல் ஆய்வாளர் தக்க நடவடிக்கை எடுத்து பதில் அனுப்ப, காவல் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 

தர்பார்

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “திரைப்படம் லோக்கல் சேனலில் வேளியானது தொடர்பாக மதுரை ஆணையகரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் லோக்கல் சேனல் மீதும், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.