‘லேஸ் சிப்ஸ்’ உருளைக் கிழங்குக்காக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி!

 

‘லேஸ் சிப்ஸ்’ உருளைக் கிழங்குக்காக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி!

குஜராத் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை  பெப்சி  நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது . 

அகமதாபாத்: குஜராத் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை  பெப்சி  நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது . 

lays

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும்   லேஸ் சிப்ஸை இந்தியாவில் பெப்சிகோ  நிறுவனம்  விற்பனையைச் செய்து வருகிறது. இதற்காக லேஸ் நிறுவனம் அதன் சிப்ஸ்களுக்கு FL-2027 மற்றும் FC-5 ரக உருளைக்கிழங்குகளைப் பதிவுசெய்து பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் FL-2027 மற்றும் FC-5 ரக உருளைக்கிழங்குகளின்  காப்புரிமை தங்களிடம் இருக்கும் நிலையில்  குஜராத்தை சேர்ந்த 9 விவசாயிகள் சிலர் அந்த வகை உருளைக் கிழங்குகளைப் பயிரிட்டதாகக் கூறி பெப்சிகோ  நிறுவனம்  நோட்டீஸ் அனுப்பியது. மேலும், 4 விவசாயிகளிடம்  ரூ.4.2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு  கேட்டு  அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு விவசாயிகளோ, ‘பெப்சிகோ பெரிய நிறுவனம் என்பதால் அவர்களுக்கு எதிராக எங்களால் எதுவும் செய்யமுடியாது. இதில் மத்திய மாநில  அரசுகள் தலையிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். 

potato

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பெப்சி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையேயான சட்டப் போராட்டத்தில் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாகக் குஜராத் மாநில அரசு அறிவித்தது. இது போன்று வழக்கு தொடர்ந்துள்ள பெப்சி நிறுவன பொருட்களைப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று சமூக வலைதளங்களிலும்  எதிர்ப்பு கிளம்பியது. 

potato

இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஜூன் 12ம் தேதி அகமதாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.