லேஸ் சிப்ஸ் உருளைக்கிழக்குக்கு விலை 1.05 கோடியா? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

லேஸ் சிப்ஸ் உருளைக்கிழக்குக்கு விலை 1.05 கோடியா? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கை, விவசாயிகள் பயிரிட்டதாகக் கூறி, பெப்ஸிகோ நிறுவனம் வழக்கு பதிவுசெய்துள்ளது. 

காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கை, விவசாயிகள் பயிரிட்டதாகக் கூறி, பெப்சிகோ  நிறுவனம் வழக்கு பதிவுசெய்துள்ளது. 

லேஸ் சிப்ஸை அறியாதவர்களும் சுவைக்காதவர்களும் இருக்கமாட்டார்கள்.அந்தளவிற்கு இந்தியாவில் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது லேஸ் சிப்ஸ். அதிகமான காற்று குறைந்த எண்ணிக்கை கொண்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் என வியாபார யுக்தியை பயன்படுத்தினாலும் அதன் அலாதியான ருசியே மக்களை அதன் பக்கம் கொண்டு சேர்த்துள்ளது எனலாம்.

lays

இந்தியாவில்  லேஸ் சிப்ஸை பெப்சிகோ  நிறுவனம்  விற்பனையைச் செய்து வருகிறது. இதற்காக லேஸ் நிறுவனம் அதன் சிப்ஸ்களுக்கு FL-2027 மற்றும் FC-5 ரக உருளைகிழங்குகளை பதிவுசெய்து பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் FL-2027 மற்றும் FC-5 ரக உருளைகிழங்குகளின்  காப்புரிமை தங்களிடம் இருக்கும் நிலையில்  குஜராத்தை சேர்ந்த 9 விவசாயிகள் சிலர் அந்த வகை உருளை கிழங்குகளை பயிரிட்டதாக கூறி பெப்சிகோ  நிறுவனம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், 4 விவசாயிகளிடம் 1.05 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு  அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

lays

ஆனால்  இது குறித்து கருத்து கூறியுள்ள விவசாயிகளோ, பாதிக்கப்பட்ட விவசாயிகள், ‘எங்கள் நிலத்தை கொண்டு  விதைக்கப்படும் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் விளைவித்து கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது. எந்த ஒரு பயிரையும் விளைவிக்க சட்டம் தங்களை அனுமதிக்கிறது. ஆனால் பெப்சிகோ பெரிய நிறுவனம் என்பதால் அவர்களுக்கு எதிராக எங்களால் எதுவும் செய்யமுடியாது. இதில் மத்திய மாநில  அரசுகள் தலையிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் வாசிக்க: சம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா? அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க!?