லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா?

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா?

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாராவுக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இன்னும் சில விஷயங்களில் ஆர்வம் உள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை: தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாராவுக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இன்னும் சில விஷயங்களில் ஆர்வம் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நம்பர்.1 நாயகியாக வலம் வரும் நயன்தாரா, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, தளபதி விஜய்யுடன் ‘தளபதி 63’, சிவகார்த்திகேயன் திரைப்படம், அறிவழகன் படம், ’சைரா நரசிம்மா ரெட்டி’, ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என அரை டஜன் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘கொலையுதிர் காலம்’, ‘ஐரா’ போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

nayanthara

கமர்ஷியல், ஹீரோயின் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் வித்தியாசம் காட்டி வரும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுக்காக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப்போவதாக கோலிவுட்டில் பேசப்பட்டது. ஆனால், தயாரிப்பு மட்டுமல்ல நீண்ட காலமாகவே நயன்தாராவிற்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.

nayanthara

ஏற்கனவே அஜித் நடித்த ‘ஆரம்பம்’ திரைப்படத்தில் நயன்தாரா உதவி இயக்குநராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. இது தவிர தற்போது எடிட்டிங், கேமரா போன்றவற்றிலும் நயன்தாரா தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆகவே அடுத்த ஆண்டு நயன்தாரா ஒரு படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.