லேடி சூப்பர் ஸ்டார் நயனின் பிறந்தநாள் செலப்ரேஷன்: விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்!

 

லேடி சூப்பர் ஸ்டார் நயனின் பிறந்தநாள் செலப்ரேஷன்: விக்னேஷ் சிவன் கொடுத்த  சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா இன்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா இன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம். ஆனால், தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டும் நயன்தாரா இன்று தனது 34வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

nayanthara

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில், நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட கேக் மற்றும் அலங்கார விளக்குகள் என அமர்க்களப்படுத்தப்பட்டுள்ளது.

nayan

இது மட்டுமின்றி நயன்தாராவின் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துகள் மூலம் சமூகவலைதளத்தை இன்று ஆக்கிரமித்து உள்ளனர்.  ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு பாணியில் நடிக்கும் நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன.

 

ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிரூபித்துள்ள நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வதில் பெருமை கொள்கிறது டாப் தமிழ் நியூஸ்.