லெபனான் கலைஞர்களுடன் ஈசனுடன் ஒரு இரவு! – களைக்கட்டும் ஈஷா மகாசிவராத்திரி

 

லெபனான் கலைஞர்களுடன் ஈசனுடன் ஒரு இரவு! – களைக்கட்டும் ஈஷா மகாசிவராத்திரி

கோவை ஈஷா யோகா மையத்தில் வருகிற 21ம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. 21ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை ஈஷா யோகா மையத்தில் ஆதியோசி சிலை முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது.

isha-yoga-9

கோவை ஈஷா யோகா மையத்தில் வருகிற 21ம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. 21ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை ஈஷா யோகா மையத்தில் ஆதியோசி சிலை முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளதால் பல்வேறு இசைக் கலைஞர்களைக் கொண்டு சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் பாடலைப் பாடிய நாட்டுப்புற பாடகர் அந்தோணிதாசன், இந்திய அளவில் புகழ் பெற்ற கபீர் கஃபே குழுவினர், குஜராத்தைச் சேர்ந்த பின்னணி பாடகர் பார்த்தீவ் கோஹில், லெபனான் நாட்டைச் சேர்ந்த டிரம்ஸ் கலைஞர்கள் உள்படப் பலரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

isha-yoga

தியான லிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனாவுடன் விழா தொடங்கி, லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணைக் கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த மகாசிவராத்திரியில் இலவசமாக பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக அளிக்கப்படும். மகா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. விழாவில் பங்கேற்க பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.