லெபனானில் நாடு முழுவதும் போராட்டம் – தங்களது மக்களை நாடு திரும்பக்கூறிய சவுதி, ஐக்கிய அரபு அமீரகம்!

 

 லெபனானில் நாடு முழுவதும் போராட்டம் – தங்களது மக்களை நாடு திரும்பக்கூறிய சவுதி, ஐக்கிய அரபு அமீரகம்!

லெபனானில் தற்போது வெடித்து வரும் கடும் போராட்டத்தால், தனது சொந்த நாட்டு மக்களை நாடு திரும்ப கூறி சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.

லெபனான் நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த புதிய வரிகள் மற்றும் சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. இது சிறுகுறு தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும்

லெபனானில் தற்போது வெடித்து வரும் கடும் போராட்டத்தால், தனது சொந்த நாட்டு மக்களை நாடு திரும்ப கூறி சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.

லெபனான் நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த புதிய வரிகள் மற்றும் சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. இது சிறுகுறு தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்கள் ஒரு சில பகுதிகளில் வன்முறையாக மாறி இருக்கிறது.

leabon

இம்மாதம் 17ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள், நாட்டு மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை அரசு சொந்த செலவில் செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

முக்கிய நகரங்களில் வீதி முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க ஏராளமான போலீசார் மற்றும் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்நாட்டு அரசை எதிர்த்துப் போராடும் பொதுமக்களை காவல்துறை மற்றும் ராணுவ படை அடக்க முயற்சித்த போது, வன்முறையாக மாறி பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

போராட்டம் மேன்மேலும் வெடித்தால் பெரும் அசம்பாவிதம் நடக்கும் என்பதால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் லெபனானில் இருக்கும் தனது நாட்டு மக்களை மீண்டும் நாட்டிற்கு திரும்ப லெபனானில் இருக்கும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகம் மூலம் வலியுறுத்தி வருகிறது. இதற்கென பிரத்தியேகமாக மையம் அமைக்கப்பட்டு நாட்டிற்கு திரும்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் இந்த மையத்தின் வாயிலாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பி இருக்கின்றனர்.

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் லெபனான் நாட்டு பிரதமர் சாத் அல் ஹரிரி மிகவும் திணறி வருகிறார். அண்டை நாடுகளின் உதவியையும் அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
-vicky